பத்தேகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் கைது
பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பாந்தோட்டை பகுதியில் கடந்த 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் வந்த கும்பலொன்று முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் மூவர் உயிரிழந்திருந்தனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு இன்னுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நேற்று (29) இரவு பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பாந்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய கஹவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். அவரிடமிருந்து 06 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று(30.09.2026) சந்தேகநபர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO..
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri