ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு மற்றுமொரு புதிய விமானம் கொள்வனவு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் புதிய A-330-243 ஏர்பஸ் ரக விமானத்தை கொள்வனவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இன்று (17) தெரிவித்துள்ளார்.
பிரான்சில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய விமானம் நேற்று (16) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதன்படி ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இந்த விமானத்தில் 22 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 240 எகானமி வகுப்பு இருக்கைகள் உள்ளதாகவும், இரண்டு என்ஜின்கள் மூலம் இயக்கப்படுவதாகவும் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய விமானத்தின் வருகையானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எதிர்நோக்கும் விமான தாமதங்கள் மற்றும் இரத்துச் சம்பவங்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என்று கருதப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri