கடுகண்ணாவையில் மீண்டும் மண்சரிவு
கடுகண்ணாவை பகுதியில் மேலும் பாறைகள் சரியும் அபாயம் தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரித்துள்ளார்.
நேற்று (10) பாறைகள் சரிந்த இடத்திற்கு மேலே மேலும் சில பாறைகள் சிக்கியுள்ளதால், அவை எந்த நேரத்திலும் சரிந்து விழக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடிகமுவ பகுதியில் தொடருந்து பாதைக்கும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு
சில பகுதிகளில் பெய்யும் உள்ளூர் மழைப்பொழிவுகள் வானிலை கண்காணிப்பு நிலையங்களில் பதிவாகாமல் போகக்கூடும் என்பதால், மண்சரிவு மற்றும் பாறை சரிவு அபாயங்களை முன்கூட்டியே கணிப்பது சிரமமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், காலநிலை மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.