முல்லைத்தீவில் மேலும் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 82 அகவையுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் நோய்த்தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 17.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்று அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது வயோதிபருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையிலேயே இவரது உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவரது உயிரிழப்புடன் மாவட்டத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri