ரிஷாட்டின் மைத்துனரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பெண்! வாக்குமூலம் பதிவு
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய மற்றுமொரு பணிப்பெண்ணையும்,ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ரிஷாட்டின் இல்லத்தில் பணியாளராக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறைக் குழு ஒன்று இன்று ரிஷாட்டின் இல்லத்துக்கு மீண்டும் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி,மைத்துனர்,மாமனார் ,சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
