திருகோணமலை வைத்திசாலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் பிக்குகள்:சர்ச்சையை கிளப்பும் சிவில் அமைப்புகள்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து தேரர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு சிலர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக்குகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக சிவில் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு திருகோணமலை விகாரை தொடர்பில் மகஜர் ஒன்றை கையளிக்க இன்று (30.01.2026) வந்திருந்த சிங்கள பௌத்த சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்திருந்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைப்பினர்,
கடுமையாக நடத்தப்படும் பிக்குகள்
சிறையில் இருக்கும் பிக்குகளுக்கு உணவு வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுக்கின்றனர்.வைத்தியசாலையில் பிக்குகள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளனர்.ஏன் இப்படி செய்கிறீர்கள்.
யாரை சந்தோசப்படுத்துகிறீர்கள்.திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் கடற்கரையில் கோவில் கட்டப்பட்டுள்ளது.மேலும் ஒரு இடத்தில் கரையை அண்மித்த பகுதியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.

ஏன் கரையோர திணைக்களத்திற்கு இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாதா? திருகோணமலையில் ஒரு மக்கள் பிரிவினருக்கு ஒரு நியாயமும் எமக்கு வேறு விதமான நீதியும் நிலைநாட்டப்படுகிறது.
இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது.நாட்டின் ஜனாதிபதிக்கே அதிகாரம் இருக்கிறது.அவர் தனக்கு கீழ் இருக்கும் ஒரு திணைக்களத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நாட்டை எப்படி நடத்துவார்? என குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri