புதுக்குடியிருப்பில் மேலும் ஒருவர் கோவிட் தொற்றால் மரணம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் ஒருவர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாகப் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நேற்று (11) அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (12) 2ஆம் வட்டாரம், கைவேலி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவரே மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து மரணமடைந்த நபரை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த மரணத்துடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 15 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan