மீண்டும் ஒரு சூறாவளி அபாயம்! வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
'டித்வா' சூறாவளி போன்று எதிர்காலங்களிலும் பாரிய சூறாவளி ஏற்படலாம் என அவுஸ்திரேலியாவின் மேற்கு பல்கழைக்கலகத்தின் பேராசிரியர் சரித்த பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சரித்த பட்டியாராச்சி, இலங்கையில் சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கியவராவார்.
தகவல்கள்
அத்துடன் கடல்சார் ஆராய்ச்சிக்கான அறிவியலில் பட்டம் பெற்றுக் கொண்ட முதல் இலங்கை பேராசிரியரும் ஆவார். மேலும் அவுஸ்திரேலியாவில் சிறந்த விஞ்ஞானிக்கான பட்டத்தையும் பெற்றுக் கொண்டவராவார்.
இணையத்தினூடாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர்,''வங்காள விரிகுடாவில் நவம்பர் மாதங்களில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையாகும். அது சில நேரம் சூறாவளியாக மாற்றமடையும்.
இம்முறையும் வங்காள விரிகுடாவில் நவம்பர் மாதத்தில் இரு தாழமுக்கம் ஏற்பட்டது. ஒன்று காலியிலும் மற்றையது ஹம்பாந்தோட்டையிலும் உருவானது. இந்த இரண்டும் இணைந்ததாலே சூறாவளி ஏற்பட்டது.
சூறாவளி ஏற்பட வாய்ப்பு
அதன் பின்னர் அந்த சூறாவளி வடக்கை நோக்கி நகர்ந்தது.இது மெதுவாக நாட்டை கடந்து செல்லும் தன்மையை கொண்டிருந்ததால்.மழை வீழ்ச்சி அதிகரித்து. இந்த காரணங்களாலே பாதிப்பு அதிகமாகியது.
இந்த நிலையில் எதிர்காலங்களிலும் பாரிய சூறாவளி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இது தொடர்பில் முன் கூட்டியே பொது மக்களுக்கு அறிவிக்ககூடிய கட்டமைப்பை உருவாக்குவதே சிறந்த தீர்வாகும்.'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam