விண்வெளியில் அணு மின் நிலையம்!அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்
ரஷ்ய-சீன கூட்டுத் திட்டத்தில் விண்வெளியில் அணு மின் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவின் எதிர்வரும் புத்தாண்டு திட்டத்தில், ரஷ்ய-சீன கூட்டு ஆராய்ச்சி மையத்திற்காக, சந்திரனில் மனிதர்களை கொண்டு அணு மின் நிலையத்தை கட்ட திட்டமிட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டு சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளியில் முதல் மனிதராக கால் பதித்ததிலிருந்து, விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா முன்னணி சக்தியாக மாற முயற்சித்து வருகிறது. ஆனால் சமீபத்திய தசாப்தங்களில் அது அமெரிக்கா மற்றும் சீனாவை விட பின்தங்கியுள்ளது.
2036 ஆம் ஆண்டுக்கான திட்டம்
2023 ஆம் ஆண்டு ஆகஸ்டில், அதன் ஆளில்லா லூனா-25 லேண்டர், சந்திரனில் தரையிறங்க முயற்சிக்கும்போது சந்திரனின் மேற்பரப்பில் மோதியது.
இது ரஷ்யாவின் எதிர்கால இலட்சியங்களுக்கு பெரும் அடியாக அமைந்தது. ரஷ்யாவின் அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், 2036 ஆம் ஆண்டுக்குள் ஒரு சந்திர மின் நிலையத்தை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக லாவோச்கின் யூனியன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த மின் நிலையம் அணுசக்தியாக இருக்கும் என்று ரோஸ்கோஸ்மோஸ் வெளிப்படையாகக் கூறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri