சிவராசா அனோஜன் விடுதலை..! ஜனாதிபதிக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்றுள்ளது.
சிவராசா அனோஜன் விடுதலை
சிவராசா அனோஜன் தற்போது சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவரது பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

சிவராசா அனோஜனை விடுதலை செய்ததற்காக சவூதி அரேபிய அரசுக்கும், விவகாரத்தில் தலையீடு செய்த அனைவருக்கும் நன்றி உரித்தாக வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, எந்த நேரத்திலும் இலங்கை மக்களுக்காக நிற்பது தனது பொறுப்பு என்று கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri