திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த நகர்வலம்
வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்திலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட கேடயத்தில் பெருமான் மாதுமை அம்பாள் சமேதராக காட்சியளிக்கும் நகர்வலம் இடம்பெற்றுவருகிறது..
குறித்த நகர்வலம் நேற்று (09.03.2024) மாலை ஆரம்பயானதுடன் நாளை மாலை ஆலயத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கோட்டைவாசல் வழியாக மணிக்கூண்டு கோபுரம், ஏகாம்பரம் வீதி, கோணேசப் பெருமானும் மாதுமைப் பிராட்டியாரும் தோன்றி அருளிய வீரநகர் புனித கிணற்றடி ஆலயம், ஏகாம்பரம் வீதி கேணியடி சித்தி விநாயகர் ஆலயம், அருள்மிகு திருக்கடலூர் பத்திரகாளி அம்பாள் ஆலயம், உப்புவெளி தொடுவாய்ப் பிள்ளையார் ஆலயம் 3ம் கட்டைச்சந்தி அருள்மிகு சோலையடி வைரவர் ஆலயம், அருள்மிகு ஆலையடி ஞான வைரவர் ஆலயம், அலஸ்தோட்டம் திஃஸ்ரீ மாதுமையம்பாள் வித்தியாலயம் ஊடாக செல்லவுள்ளது.
விசேட அபிசேக ஆராதனை
மேலும், புளியம்குளம் பிரதான வீதி, புளியம்குளம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், அருள்மிகு முனியப்பர் ஆலயம், பாடசாலை வீதி, செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம், அருள்மிகு ஸ்ரீ ஆதிபத்திரகாளியம்பாள் ஆலயம், பாடசாலை வீதிச்சந்தி கதிர்காமத்தம்பி வீதி வழியாக 3ம் கட்டை வரை சென்று திரும்பி அருள்மிகு ஆலடி விக்னேஸ்வரர் ஆலயம், கதிர்காமத்தம்பி வீதி, அன்புவழிபுரம் அருள்மிகு ஞானவைரவர் ஆலயம், அன்புவழிபுரம் நாற்சந்தி, அன்புவழிபுரம் வீதி ஊடாக கண்டி வீதி, காந்திநகர் பிரதான வீதி ஊடாக அருள்மிகு காந்திநகர் முத்துமாரியம்மன் ஆலயம் அருள்மிகு தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயம், விபுலானந்த அடிகளார் வீதி ஊடாக கன்னியா வீதியை அடையவுள்ளது.
இதன் பின்னர், அனுராதபுரச்சந்தியை அடைந்து கண்டி வீதி விபுலானந்தா கல்லூரி, வலதுபக்கம் தியேட்டர் வீதி அருள்மிகு பாலையூற்று பாலமுருகன் ஆலயத்தை அடைந்து ஞாயிற்றுக்கிழமை 10.03.2024 மாலை5.00 மணிவரை விசேட அபிசேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
