தயார் நிலையில் இருக்கவும்!! வெளியானது அறிவிப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. 30 ஆண்டுகளாக நாட்டில் இருந்த புலிகளின் பயங்கரவாதம் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்பது எவருக்கும் நினைவில் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் பாரதூரம் எந்தளவுக்கு இருந்தது என்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 1.5 என்ற வீதத்திற்கு வீழ்ச்சியடைந்த காலம் இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க >>> விடுதலைப் புலிகளின் பாரிய தாக்குதல்களும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்: பிரசன்ன ரணதுங்க
2. முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். குறித்த பதவியை ஏற்பதற்குத் தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க >>> தயார் நிலையில் இருக்கவும்: ரணிலிடம் இருந்து நவீன் திஸாநாயக்கவுக்கு சென்ற அறிவிப்பு
3. பிரபல நடிகர் ஜக்சன் அந்தனியை பார்வையிடுவதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க >>> பிரபல நடிகரை பார்வையிட வைத்தியசாலை சென்ற மகிந்த
4. இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை வழங்குவதற்காக நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இது தொடர்பில் நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க >>> இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக எடுக்கப்படும் நடவடிக்கை! வெளியானது அறிவிப்பு
5. கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் இன்று பிற்பகல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து செல்லாமல் போராட்டக்களப் பகுதியில் தங்கியிருந்த மக்களும் அகற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க >>> காலிமுகத்திடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிப்பு! எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன
6. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க >>> கோட்டாபயவுக்கு ஆதரவாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனு தாக்கல்..!
7. இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 357.24 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 368.56 ரூபாவாக காணப்படுகிறது.

மேலும் படிக்க >>> இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு
8. "சீனக் கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அது இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க >>> சர்ச்சையை ஏற்படுத்திய சீனக் கப்பல் தொடர்பில் கமல் குணரத்ன வெளியிட்ட தகவல்
9. இன, மத, சாதிய பேதங்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க >>> தமிழர் ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தால் அதனை மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ரமேஷ் பத்திரன
10. கொழும்பு - காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து கஞ்சா செடிகள் மற்றும் பெருமளவான சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் பெருமளவிலான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க >>> காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா செடிகள்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri