காலிமுகத்திடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிப்பு! எஞ்சியிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன (Video)
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் இன்று பிற்பகல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து செல்லாமல் போராட்டக்களப் பகுதியில் தங்கியிருந்த மக்களும் அகற்றப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவருகிறது.
போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் கடந்த 10ஆம் திகதி அறிவித்திருந்தனர்.
| கோட்டாகோகம போராட்டக்காரர்களின் அறிவிப்பு |
அத்துடன், போராட்டக்களத்திலிருந்து வெளியேறினாலும் கூட எமது போராட்டம் நீடிக்கும். நாங்கள் அரைவாசி வெற்றியை அடைந்தாலும் கூட இன்னும் வெற்றிகளை காண வேண்டியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் அப்பகுதியிலிருந்து செல்லப் போவதில்லை என தெரிவித்து சில ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியிலேயே தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - நாதன்





ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam