சர்ச்சையை ஏற்படுத்திய சீனக் கப்பல் தொடர்பில் கமால் குணரத்ன வெளியிட்ட தகவல்
"சீனக் கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அது இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது" என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் இன்னமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை. சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கின்றது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்குள் குறித்த கப்பல் வருமா என்பது தொடர்பில் எம்மால் உறுதியான பதில் எதுவும் வழங்க முடியாது. ஏனெனில் இரு நாட்டு அரசாங்கங்களும் இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் தீவிர பேச்சில் ஈடுபட்டுள்ளன" என்றார்.
கப்பலின் சமீபத்திய செயற்கைக்கோள் படக் காட்சி
அத்துடன், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடையவிருந்த சீன
ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5, தமது பயண வேகத்தை - சமீபத்திய
செயற்கைக்கோள் படக் காட்சிகளின் படி குறைத்துள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்தும், இலங்கை, தாம் முன்னர் வழங்கிய, துறைமுக அனுமதியை திரும்பப் பெற்றதையடுத்தும், குறித்த கப்பல், அதன் பயணத்தை மெதுவாக்கியுள்ளது.
எனினும் இந்திய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தின் தரப்புகளின் தகவல்படி, கப்பலின் இலக்கு இலங்கை துறைமுகத்தை நோக்கி தொடர்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நோர்வே நிறுவனமான மாரிடைம் ஒப்டிமாவால் சேகரிக்கப்பட்ட அட்லஸ் மென்பொருள் தரவுகளின்படி, யுவான் வாங் 5 தற்போது அம்பாந்தோட்டையிலிருந்து 599 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
இதன்படி, சீனத் துறைமுகமான தைகாங்கிலிருந்து புறப்பட்டதிலிருந்து தொடர்ந்து 35 மணி நேரம் இந்த கப்பல் கடலில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் அழுத்தம்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை நிறுத்தப்படவிருந்த கப்பலின் வருகையை, பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா ஆட்சேபித்ததை அடுத்து, அதன் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் பீய்ஜிங்கிடம் கேட்டுக் கொண்டது.
யுவான் வாங் 5, 2007 இல் ஜியாங்னன் ஷிப்யார்டால் கட்டப்பட்டது மற்றும் சீன மக்கள் இராணுவத்துக்கு சொந்தமாக்கப்பட்டது.
"யுவான் வாங் 5 கப்பல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ள முடியும் என்று சீனாவின் ஆதரவு நிறுவனமான Belt & Road Initiative Sri Lanka (BRISL) இன் இயக்குனர் ஒய் ரணராஜா, ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் பரந்த, பட்டுப்பாதை அபிலாஷைகளின் அடிப்படையில், கப்பலின் அம்பாந்தோட்டை குறிப்பிடத்தக்கதாகும்.
வட்டமிடும் யுத்த - உளவு கப்பல்கள்! இலங்கையை கதிகலங்கச் செய்துள்ள சீனா |
சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டும்: சுயாதீன கட்சிகள் கோரிக்கை |