இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்
2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 241 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 37,934 ஆகும்.
சுற்றுலாப் பயணிகள்
அதன்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும் , பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் , மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகளும் , ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகளும் , மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
