மியன்மார் அகதிகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
மியன்மார் (Myanmar) அகதிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்குமே முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
மியன்மார் அகதிகள் தொடர்பில், மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“அகதிகள் என்ற மனிதாபிமானத்தோடு மட்டுமே இவர்களை கையாண்டு கொண்டிருக்கிறோம்.
சர்வதேச ரீதியான சட்ட திட்டங்கள்
இங்கு வேறு எதனையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக யாரும் குழப்பமடையவோ, கவலை அடையவோ தேவையில்லை.
தேசிய மற்றும் சர்வதேசரீதியான சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒருங்கிணைப்புடன் இவர்களை நாங்கள் கையாண்டு கொண்டிருக்கின்றோம்.
அகதிகள் எவரும் உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ துன்புறுத்தல்களுக்கோ ஆளாககூடாது என்பதில் மிகக் கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இவர்கள் தொடர்பாக வெளிவகார அமைச்சு, பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியன ஒன்றாக இணைந்து பணியாற்றிக் கொண்டு வருகின்றது.
மேலும், மியன்மார் அகதிகள் விவகாரத்தை , ஒரு சாரார் தங்களுடைய சுய அரசியலுக்காக அகதிகளை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறுகின்றனர்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
