2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள தேர்வுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் சாதாரண தரம் தேர்வுகள் திட்டமிடப்பட்ட திகதிகளில் வெளியேறும் என தேர்வுகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நேற்று(31.03.2026) வெளியிடப்பட்ட உயர் தர தேர்வு முடிவுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்வு வெளியீட்டுக்கான திகதி அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு திகதிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி மாணவர்கள் உரிய திகதிகளின்படி தங்கள் படிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில காரணங்களால் தேர்வு திகதிகளில் மாற்றம் ஏற்பட்டதால், கடந்த காலங்களில் மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும், எனவே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளில் தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
சாதாரண தரத் தேர்வு முடிவுகள்
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரத் தேர்வின் செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும் என்றும், அதன் முதல் கட்ட மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட மதிப்பீடு இன்று(01.04.2026) தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 30 முதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைத் தேர்வு ஆகஸ்ட் 9 ஆம் திகதியும், உயர் தரத் தேர்வு ஆகஸ்ட் 10 ஆம் திகதியும், சாதாரண தரத் தேர்வு டிசம்பர் 8 ஆம் திகதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.