உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்! பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியிருந்த நிலையில், பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இடைநிறுத்தப்பட்டுள்ள பெறுபேறுகள்
மேலும், 11 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், வெளியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீள் திருத்த விண்ணப்பங்கள் இணைய வழியின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan