அனைத்து வாகன உரிமையாளர்களும் எரிபொருள் பெறலாம்! வெளியான அறிவிப்பு
ஒற்றை மற்றும் இரட்டை எண்களில் முடியும் வாகனப் பதிவு எண்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் இன்று (01) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருள் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி 19 முதல், வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் கியூஆர் (QR) அமைப்பு மூலம் எரிபொருள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம்..
அதன்படி, பூஜ்ஜியம் மற்றும் இரட்டை இலக்க பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களின் கடைசி இலக்கம், இரட்டை இலக்க தேதிகளில் எரிபொருள் வாங்க அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று ஒற்றைப்படை நாளாக இருந்தாலும், இரட்டைப்படை எண்ணில் முடியும் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும்.
இந்த தகவலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே வெளியிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan