அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவனின் வெற்றியின் இரகசியம்..
ஒவ்வொரு நாளும் விருப்பத்துடன் பாடங்களை கற்று வந்தால் உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெறுவது இலகுவாகும் என அகில இலங்கை ரீதியில், இயற்பியல் அறிவியல் (Physical Science) பாடத்தொகுதியில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மாணவர் தெய்வேந்திரன் திருக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பரீட்சை அவ்வளவு கஷ்டமானது அல்ல
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் நினைப்பது போன்று உயர்தரப் பரீட்சை அவ்வளவு கஷ்டமானது அல்ல. ஒவ்வொரு நாளும் படிக்கும் பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டால் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.
எனக்கு இத்தனை காலமாக ஆதரவளித்த சக மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் துணையாக நின்ற பெற்றோர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரிதாக பங்கேற்கவில்லை. ஆனால் விளையாட்டு போட்டிகளில் மட்டும் வலய மட்டம் வரை சென்றுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
