இலங்கைக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி! மத்தியவங்கி வெளியிட்ட தகவல்
நடுத்தர காலத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புவிசார் அரசியல் போக்குகளின் தாக்கம், மாறிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சூழல்கள், அத்துடன் காலநிலை அபாயங்கள் ஆகியவையே இந்த அதிக நிச்சயமற்ற தன்மைக்குக் காரணங்கள் என்றும் மத்திய வங்கி கூறுகின்றது.
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள நெருக்கடி
வியாழக்கிழமை (13) இரவு இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணயக்கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகள், வர்த்தகப் பரிமாற்றங்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் மறைமுக விளைவுகள் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.