கடும் வறட்சியால் வில்பத்து சரணாலய விலங்குகள் பாதிப்பு
புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சிக் காரணமாக வில்பத்து சரணாலய விலங்குகள் மற்றும் பறவைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வறட்சியான காலங்களில் விலங்குகள் பறவைகள் நீர் அருந்துவதற்காக வனவிலங்கு அதிகாரிகளினால் வில்பத்து சரணாலயத்தில் ஆங்காங்கே குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்துவதற்காக 3 நாட்களுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டுள்ள குட்டைகளுக்கு வாகனங்களில் சென்று நீர் ஊற்றி வருவதாக எலுவாங்குளம் வில்பத்து சரணாலய வனவிலங்குத் திணைக்களத்திற்கு அதிகாரி ஜயவீர தெரிவித்தார்.
கடும் வறட்சி
குறித்த குட்டைகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்தி தாகத்தை தீர்ப்பதாக திணைக்களத்திற்கு அதிகாரி தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சிக் காரணமாக விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்துவதற்கு நீரைப் பெரும் கலா ஓயா ஆற்றின் நீரின் மட்டமும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
