கடும் வறட்சி: மலையகத்தில் ஆறுகள் - நீர்த்தேக்கங்களில் குறைவடையும் நீர்மட்டம் (Video)
நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது.
சில பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கு நீரைப் பெறுவதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வறட்சியால் தேயிலை விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதால், கடும் சிரமத்துக்கு மத்தியிலேயே கொழுந்து கொய்து வருவதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டு தீ சம்பவங்களும் அதிகரிப்பு
வறட்சியான காலநிலையால் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்துள்ளது.
அத்துடன், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கும்போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் இருப்பிடங்கள், புராதன கோயில், விகாரை, பாலங்கள் உட்பட பல்வேறுபட்ட ஞாபக சின்னங்கள் தற்போது வெளியில் தோன்றுகின்றன.

பெருமளவானவர்கள் இதனைப் பார்வையிட்டும் வருகின்றனர். அதேவேளை, மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் மனித செயற்பாடுகளால் காட்டு தீ சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam