நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்: வெளியான விசேட வர்த்தமானி
புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (15.09.2023) முதல் இந்த சட்டம் தொடர்பான விதிகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் தடுப்பு சட்டம்
ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகளும் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





லண்டன் புறப்பட்டபோது 260 உயிர்களை பறித்த கோர விமான விபத்து: அடிக்கடி மருத்துவ விடுப்பெடுக்கும் விமானிகள் News Lankasri
