மாத்தளை நோக்கிப் பயணித்த முதியவர் பேருந்தில் உயிரிழப்பு
கொழும்பில்(Colombo) இருந்து மாத்தளை நோக்கி பயணித்த முதியவர் ஒருவர் நிட்டம்புவை அருகே பேருந்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(07.05.2024) இரவு ஏழு மணியளவில் நடைபெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து மாத்தளை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகள்
தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான இந்த பேருந்து நிட்டம்புவ பிரதேசத்தை அண்மித்த போது, பின் இருக்கையில் பயணித்தவர் சுகயீனமுற்றிருப்பதை அறிந்ததும் பேருந்து நிட்டம்புவ பொலிஸாருக்கு அருகில் நிறுத்தப்பட்டு நோயாளர் காவு வண்டியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோயாளர் காவு வண்டியில் வந்த வைத்திய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட போது, நோயாளி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்ததையடுத்து, பொலிஸார் தலையிட்டு சடலத்தை வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த முதியவரின் விவரம் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
