ரணிலின் நிகழ்வில் கோட்டாபய
சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹராவை நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பான பெரஹரா விழாவாக மாற்ற பக்தர்களின் ஒற்றுமை உதவியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெராவை நேற்று (23) ஆரம்பித்துவைத்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
கொழும்பு நவம் பெரஹெரா நாற்பத்தைந்தாவது தடவையாகவும் நேற்று (23) இரவு வீதி உலா நடைபெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மங்கள ஹஸ்திராஜயா யானை மீது கரடுவ வைத்து பெரஹெராவை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது முன்னா்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்து கொண்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
கங்காராம விகாரையினால் கொழும்பு நவம் பெரஹெராவை நடத்துவது நாற்பத்தைந்தாவது ஆண்டாகும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவிடம் கங்காராம பொடி ஹாமதுருவோ (தேரர்)அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பெரஹெரா ஆரம்பிக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் அரச அனுசரணையுடம் இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த 45 ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டால், இன்று தொழில்நுட்ப ரீதியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் இணையதளம் மூலம் பெரஹெராவைக் காணவும் வாய்ப்பும் உள்ளது. இந்தப் பெரஹராவுக்கு ஏராளமான அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களின் உதவி கிடைக்கிறது.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பெரஹராவையும், இன்றைய பெரஹராவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்றைய பெரஹராவில் தொழில்நுட்ப முன்னேற்றம் மிக அதிகம். இது பக்தர்களின் பலத்தை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதி தொழிற்சங்க அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பெருந்தொகையான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |