ரணிலுக்கு எதிராக வகுக்கப்படும் வியூகம்! தயாராகும் தரப்பினர்
பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிப்பதற்கான வியூகத்தை அனைவரும் இணைந்து வகுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேமுலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்திக்குள் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தொடர்பில் நான் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றேன்.
ரணிலை சந்தித்து பேச்சுவார்த்தை
காலையில் எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பவர்கள் மாலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசுகின்றனர்.
எனினும் இவ்வாறானவர்கள் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனக்கு தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய ஆலோசனைக்கமைய நான் கட்சி செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.
எனவே கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை இவ்வாறு செயற்குழுவின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.
ஆனால் கட்சிக்குள் ஒருவரோரொடுவர் மோதிக் கொண்டிருக்காமல் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிப்பதற்கான வியூகத்தை அனைவரும் இணைந்து வகுக்க வேண்டும்.
சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து தோற்கடிக்க வேண்டிய நபர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனவே அதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.
அதனை விடுத்து கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டிருந்தால் அது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.
நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்து வைத்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உடனுக்குடன் கோபம் வருவதைப் போன்று, அக்கோபம் மிக விரைவில் காணாமல் போய்விடும்.
எனவே அவர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நேர்மையான அதிகாரியான அவர் வேறு எந்த தரப்புடனும் இணைய மாட்டார் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
