கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா ஆரம்பம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று (24.02.2024) இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு திருவிழாவிற்கு இம்முறை இலங்கையில் இருந்து 4000 வரையான பக்தர்களே வருகை தந்ததுடன் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
பக்தர்கள்
மேலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், இலங்கை கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, கடற்படை உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் , பொலிஸ் உயரதிகாரிகள் மதகுருமார்கள், பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
குறித்த திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
