இரத்தினபுரியில் பரவும் நோய் குறித்து வெளியான தகவல்!
இரத்தினபுரி மாவட்டத்தில் காசநோய் அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காசநோய் தடுப்பு தொடர்பான பொது விழிப்புணர்வு குறித்து இன்றைய தினம் (17.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, கடந்த வருடம் இலங்கையில் 331 காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
அறியாமையே முக்கிய காரணம்
இதில் 30 பேர் மரணமடைந்துள்ள நிலையில், சுமார் 10 சதவீதமானோர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டமை கவலைக்குரிய விடயம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 14,000 காசநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டாலும், பத்தாயிரம் பேர் மட்டுமே கண்டறியப்படுகின்றனர்.
சுமார் 4,000 நோயாளர்கள் பதிவாகாமல் இருப்பதற்கு அறியாமையே முக்கிய காரணம் என வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.





ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
