நாடாளுமன்றத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஊழியர்
நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் காய்ச்சல் உட்பட கோவிட் அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளார்.
அவ்வாறு செயற்பட்டவர் கோவிட் தொற்றாளர் எனவும் குறித்த ஊழியரை நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த ஊழியரின் முகம் சிவப்பாக இருந்ததுடன், மிகவும் சுகயீனமாக இருந்தனை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் உடனடியாக கோவிட் பரிசோதனைக்குள்ளாகுமாறு ஏனைய ஊழியர்கள் கூறிய போதிலும் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் பிரச்சினைகள் உங்களுக்கே உள்ளதெனவும் கூறி ஏனைய ஊழியர்களை பலவந்தமாக கட்டிப்பிடித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற பிரதானிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழியர் கட்டிபிடித்த ஊழியர்கள் உட்பட அந்த பிரிவில் மேலும் 5 ஊழியர்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஊழியரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அந்த பிரிவு ஊழியர்களுக்கு இடையில் கோவிட் பரவியிருக்கலாம் என நாடாளுமன்ற அதிகாரிகள் நம்புகின்றனர்.
சர்ச்சைக்குரிய குறித்த ஊழியரிகள் வீட்டில் உள்ளவர்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் பணிக்கு வந்துள்ளார். பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் பொது இடங்களுக்கு சென்று மரக்கறி கொள்வனவு செய்துள்ளார்.
இதனை அறிந்த சுகாதார அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய (09-02-2022) நாடாளுமன்ற நேரலை... |