குருநாகலில் மின்சார வேலியில் சிக்குண்டு யானை உயிரிழப்பு
குருநாகல் - நிகாவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் காட்டுயானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.
குறித்த யானையின் சடலமானது நேற்று அதிகாலை நிகாவரெட்டிய - திவுல்லேவ திகன்னேவ பகுதியில் வைத்து வனஜீவராசிகள்
கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த காட்டு யானை
இதன்போது உயிரிழந்த காட்டு யானை சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த அதிவலுக் கொண்ட மின்சாரக் கம்பியில் சிக்குண்ட உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த காட்டு யானை சுமார் 8 அடி உயரம் எனவும் 30 வயது மதிக்கத்தக்கது என்றும் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நிகாவெரெட்டிய நீதிமன்றத்தில் நேற்று(26) முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் உயிரிழந்த காட்டு யானை நிகவரெட்டிய மிருக சிகிச்சைப் பிரிவின் வைத்தியரினால் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்த உள்ளதாக வனஜீவராசிகல் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
