சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் – சுதந்திரக் கட்சி உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடாத்தப்பட்டது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் என்ற யோசனைக்கு ஜனாதிபதி மதிப்பளித்தமைக்காக நன்றி பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்திற்கு பெருகும் பூரண ஆதரவு
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.