அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு! ஒருவர் கைது
அம்பிட்டிய சுமன ரதன தேரரின் இருப்பிடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி அதிகாலை அம்பாறை - கெவிலியாமடு அமரராமய விகாரையில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் ஒருவர் கைது
எனினும் இந்த சம்பவத்தால் தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சுமனரதன தேரரின் உறவினர் ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.




