மொரட்டுவயில் பேருந்து விபத்து: இளம் ஓட்டுநரின் மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
மொரட்டுவ, ராவதவத்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒட்டுனர் பலத்த காயமடைந்து பாணந்துரை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பேருந்து நிறுத்துமிடத்துக்கு பயணத்துக்கான அனுமதி பெறுவதற்காக வந்த பேருந்தே இன்று(13) காலை விபத்தில் சிக்கியுள்ளது.
மொரட்டுவ, ராவதவத்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியின் மத்தியில் இருந்த ஒரு பாரிய மரத்தில் மோதி, வீதியை விட்டு விலகி, மின்சாதனக் கடைக்கு முன்னால் உள்ள பெயர் பலகையில் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தை 23 வயது நடத்துனரே ஓட்டிச் சென்றதாகவும், மருத்துவ அறிக்கையில் அவர் மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மொரட்டுவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவிர்க்கப்பட்ட விபத்து
மொரட்டுவ - கோட்டடை சாலை எண் 100இல் கொழும்பிலிருந்து காலி வீதி வழியாக மொரட்டுவ நோக்கி வந்து சென்று கொண்டிருந்த பேருந்து, வீதியின் நடுவில் உள்ள ஒரு மரத்தில் மோதி, முன்னோக்கிச் சென்று, தனியார் வகுப்புகள் நடைபெறும் இடதுபுறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் முன் உள்ள பெயர்ப் பலகையிலும், மின்சாதனக் கடையிலும் மோதியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்து ஓட்டுநர் பேருந்திலிருந்து கீழே குதித்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். விபத்து நடந்த இடம் தனியார் வகுப்புகள் நடைபெறும் கட்டிடமாகும்.
மாணவர்கள் இருந்திருந்தால் பலர் காயமடைந்திருக்கலாம், காலையில் மாணவர்கள் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




