ராஜபக்ச குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள்! நளிந்த ஜயதிஸ்ஸ
மகிந்த, கோட்டாபய, பஸில், சமல், நாமல் என ராஜபக்ச குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரிய தண்டனைகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
ராஜபக்ச குடும்பத்தினர்
"விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்த மகிந்த ராஜபக்சவை நாட்டின் சட்டம் இன்று அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.

இப்போது அவர் தங்காலையில் இருந்து கொண்டு அரசியல் இலாபம் தேடும் வகையில் அழுது புலம்பியவாறு அறிக்கை விடுகின்றார். குடும்ப ஆட்சி நடத்தி இந்த நாட்டை அழித்த ராஜபக்ச குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
பெரும் குற்றவாளிகளான அவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரிய தண்டனைகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
செம்மணியும் மன்னாரில் தோண்டப்பட்ட ஒல்லாந்தர் கால எலும்பு கூடுகளா..! கேள்வி எழுப்பும் முன்னாள் கடற்படை அதிகாரி
வசூலில் பட்டய கிளப்பும் Spider-Man: Brand New Day திரைப்படம்... 4 நாட்களில் இத்தனை கோடியா? Cineulagam
பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவரவேண்டும்: நீதிபதி உத்தரவு News Lankasri