ஆடம்பர வீடுகளை கட்டித்தருவதாக பெருந்தொகை பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய பெண்கள்
இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மிரிஹான சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் பெற்ற பின்னரும் வீடுகளை கட்டித்தராதது குறித்து அப்பிரிவினருக்கு வந்த 245 முறைப்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடிக்கு உடந்தை
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த 4 கார்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் முறையே கஹவத்த மற்றும் கடுவெல பகுதியை சேர்ந்தவர்களாவர்.
இதற்கமைய, சந்தேகநபர்கள் நேற்று (19) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் 29ஆம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.