உச்சம் தொட்ட அமெரிக்காவின் ஆயுத விற்பனை
கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இராணுவ ஆயுதங்களின் விற்பனை அளவு உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி, இதுவரை இல்லாத அளவிற்கு 238 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதல் 2022 பெப்ரவரி மாதம் முதல் இடம்பெற்று வருவதோடு உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் செயற்பட்டு வருகின்றன.
பட்டியலில் உள்ள நாடுகள்
அத்துடன், அமெரிக்க இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை தொடர்ந்தும் பெருமளவிற்கு உக்ரைனுக்கு வழங்கி வருகின்றது.
அமெரிக்காவினை தொடர்ந்து ஜேர்மன், பல்கேரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் குறித்த பட்டியலில் உள்ளடங்கியுள்ளன.
ஜேர்மன், பல்கேரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் முறையே 8.5 பில்லியன், 1.5 பில்லியன் மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இராணுவ ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |