இலங்கைக்கு அமெரிக்காவின் உயர் படையதிகாரி விஜயம்
நான்கு நட்சத்திர தரத்தைக்கொண்ட அமெரிக்க கடற்படை அட்மிரலும், அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Steve Koehler) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
குறித்த விஜயம் நாளை ஒக்டோபர் 10ஆம் திகதியன்று இடம்பெறும் என அமெரிக்க தூதரகம்
2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க இராணுவ விஜயமாக இது அமைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, அட்மிரல் கோஹ்லர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த, நெகிழ்ச்சியான உறவை உறுதிப்படுத்துவார் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படை அட்மிரல்
இந்தநிலையில் அமெரிக்க கடற்படை அட்மிரல், இலங்கையின் ஜனாதிபதி, படையதிகாரிகள மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஒரு கடற்படைக் குடும்பத்தில் வளர்ந்த நிலையில், 1986 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக்கழகத்தின் போல்டரில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், 1989 இல் கடற்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், 600 தரையிறக்கங்களுடன் F-14 Tomcat மற்றும் F-18 சூப்பர் ஹோர்னெட் விமானங்களில் 3,900 மணிநேரங்களுக்கு மேல் பறந்துள்ளார். அவர், 2024 ஏப்ரல் 4ஆம் திகதியன்று அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |