வன்னியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்குதல் செய்துள்ள சுயேட்சைக்குழு
வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை கந்தசாமி இன்பராஜா தலைமையிலான சுயேட்சைக்குழு நேற்று தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சைகுழுவில் போட்டியிடுகின்றது.
இதற்கமைய, வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் நேற்று (09) வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த க.இன்பராஜா, "நாங்கள் போராளிகள், மாற்றத்தினை கொண்டு வருவதற்காக களம் இறங்கியுள்ளோம். இன்று மக்களும் போராளிகளும் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
தங்களுக்குள் முரண்பட்டு சண்டையிட்டு கொண்ட அரசியல்வாதிகள், தேர்தலுக்காக புத்தில் இருந்து ஈசல் வருவதுபோல வருகின்றனர்.
அத்துடன், இளையவர்களுக்கும் தமிழ் விடுதலை புலிகளுக்கும் வாய்ப்பை கொடுக்காமல் நரிகள் எல்லாம் வெளியே வருகின்றனர். ஆனால் நரிகளுக்கு பாடம்புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
