காசாவில் சேதமடைந்துள்ள விளைநிலங்கள்: ஐ. நா விசேட அறிக்கை
காசாவின் 60 சதவீதத்திற்கும் அதிகமான விளைநிலங்கள் தொடர்ச்சியான மோதலால் சேதமடைந்துள்ளதாக ஐ. நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் தாக்கத்தினால் 2 மில்லியன் மக்கள் அவசர உணவுத் தேவையை பூர்த்திசெய்யமுடியாமல் பட்டினியால் வாடுவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகளின் செயற்கைக்கோள் மையம் (UNOSAT) ஆகியவற்றால் சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுக்கு அமைய இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
விளைநில சேதம்
இதில் 52.5 சதவீத விவசாய கிணறுகளும், 44.3 சதவீத பசுமை விளைநிலங்களும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி காசாவில் உள்ள விலங்குவளர்ப்பு செய்யும் பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |