ஈரான் மீதான பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேலிய களமுனை
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை மையப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் நிறைவுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சமீபத்தைய தாக்குதலுக்கு பின்னர் ஜோ பைடனுடன் இடம்பெறும் முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலாக இது கருதப்பட்டது.
குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை தகவல்
மேலும் கலந்துரையாடல் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியாகும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக இடம்பெற்ற(21.08.2024) இருதரப்பு கலந்துரையாடலில் பங்குபற்றிய கமலா ஹரிஸ் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி குறித்து இரு தலைவர்களும் விவாதிருப்பார்கள் என வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |