அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் நிலவுப் பயணம்: சீனாவுக்கு சவால் விடுக்கும் ட்ரம்ப்
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் ஆழமான விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்ட்டெமிஸ்' விண்வெளிப் பயணம் இன்று(1.4.2026)தொடங்க உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்திற்கு இது ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டில் ஈரான் மீதான தாக்குதல், குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் நாடு பிளவுபட்டுள்ள நிலையில், நான்கு விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் இந்தத் திட்டம், தேச ஒற்றுமையை நிலைநாட்டவும் அமெரிக்காவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்தை உலகிற்கு நிரூபிக்கவும் ஒரு அரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
நிலவுப் பயணம்
நிலவில் நிரந்தரத் தளம் அமைப்பதையும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதையும் இலக்காகக் கொண்டுள்ள இந்தத் திட்டம், ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் தொடங்கிய 'விண்வெளிப் படை என்ற கனவின் தொடர்ச்சியாகும்.
இந்த முறை நிலவுக்குச் செல்வது வெறும் கொடியை நடுவதற்காகவோ அல்லது கால்தடங்களைப் பதிப்பதற்காகவோ அல்ல; நிலவில் நிரந்தரமாகத் தங்கி அங்கிருக்கும் அபூர்வ வளங்களை ஆய்வு செய்வதே முக்கிய நோக்கமாகும் என நாசா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நிலவில் அதிகளவில் உள்ள 'ஹீலியம்-3' (Helium-3) தனிமம், எதிர்காலத்தில் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) உலைகளை இயக்கப் பயன்படும் ஒரு விலைமதிப்பற்ற எரிபொருளாகக் கருதப்படுகிறது.
இதன் ஒரு கிலோவின் மதிப்பு தற்போது 20,000 டொலர்களுக்கும் மேல் உள்ளது. இது தவிர, விண்வெளி ஓடங்களுக்குத் தேவையான எரிபொருளாக மாற்றக்கூடிய பனிக்கட்டி நீர் மற்றும் மின்னணு சாதனங்களுக்குத் தேவையான லித்தியம், பிளாட்டினம் போன்ற அரிய கனிமங்களும் நிலவில் உள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்பு
தற்போது பூமியில் இத்தகைய கனிமச் சந்தைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், நிலவில் உள்ள வளங்களைக் கைப்பற்றுவதில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு புதிய விண்வெளிப் போர் தொடங்கியுள்ளது.
"அமெரிக்கா இனி ஒருபோதும் நிலவை விட்டுக்கொடுக்காது" என்று நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

1960-களில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவிய பனிப்போர் கால விண்வெளிப் போட்டியைப் போலவே, தற்போதைய சூழலில் சீனாவை விஞ்சுவது என்பது அமெரிக்காவின் பாதுகாப்பு, தேச வலிமை மற்றும் பொருளாதாரச் செழிப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
2028-க்குள் நிலவுக்கு மீண்டும் திரும்புவதும், 2030க்குள் அங்கு நிரந்தர முகாமை அமைப்பதும் ட்ரம்பின் தற்போதைய முக்கிய இலக்குகளாகும்.
2026 - 2027ஆம் ஆண்டுகளில் நாடு இன்னும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை