அமெரிக்காவுக்கு திறமையும் இல்லை.. விருப்பமும் இல்லை! ஈரான் சபாநாயகர் கலிபாப் சாடல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல், உலக அரங்கில் அமெரிக்கா கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அதற்கு விருப்பமில்லை அல்லது அதற்கான தகுதி அதற்கு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ள என ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் கலிபாப் கடுமையாகச் சாடியுள்ளார்.
எக்ஸ் பதிவு
இஸ்ரேலியப் படை நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதோடு, 15 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேல் அரசிடம் அமெரிக்கா காட்டும் மென்மையான போக்கை விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டு ஈரானிடம் சலுகைகளைப் பெற முடியாது என்று கூறியுள்ள கலிபாப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த 'நல்ல பொலிஸ், கெட்ட பொலீஸ்' நாடகம் இப்போது காலாவதியாகிவிட்டது என்றும், அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றத் தவறினால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது சாத்தியமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.