அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி

Chandima Weerakkody Sri Lanka Sri Lanka Government High Court of Sri Lanka
By Rakesh Jul 30, 2026 12:02 PM GMT
Report

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான சந்திம வீரக்கொடி குற்றம் சாட்டினார்.

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் தற்போதைய அரசுக்கு ஆணையளித்தனர். இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொண்டது.

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்

சரியான அணுகுமுறை

எனினும், மக்கள் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் அரசமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டு, மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கு அரசமைப்பில் இடமில்லை.

அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி | Extension Of Retirement Age For Judges

இவ்வாறான திருத்தங்களுக்குப் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சூழலில், நீதிபதிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசு ஏன் செயற்பட வேண்டும்? முன்னாள் பிரதம நீதியரசர்கள் 10 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்திலும், அரசமைப்புத் திருத்தங்களை கடந்த காலத்துக்குப் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்பின்படி ஓய்வுபெறும் வயது 65 என இருக்கும்போது, 67 வயது வரை பதவியில் நீடிக்க அனுமதிப்பது பல சட்ட ரீதியான கேள்விகளை எழுப்புகின்றது.

வழக்குகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்தச் சேவைக்கால நீடிப்பு எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான வழக்குகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.

அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி | Extension Of Retirement Age For Judges

எனவே, அந்த நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.

இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமன்றி, சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

பொதுமக்கள், நீதிபதிகள் அல்லது சட்டத்தரணிகள் யாரும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை. எனவே, அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அரசமைப்பு விதிகளை மதித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். 

அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!

அஸ்வெசும பயனாளிகளுக்கு அரசு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி - மக்களின் கொந்தளிப்பால் வன்முறை

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி - மக்களின் கொந்தளிப்பால் வன்முறை

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US