10 வருடங்களுக்கு பின் பாரிய பனிப்பொழிவை எதிர்கொள்ளும் அமெரிக்கா
ஒரு தசாப்த காலத்தின் பின்னர் முதன் முறையாக பாரிய பனிப்பொழிவையும், கடுமையான குளிரையும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடுப்பகுதியில் ஆரம்பமான பனிப்புயல் எதிர்வரும் ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
துருவ சுழலினால் ஏற்பட்ட தாக்கம்
கென்டக்கி (Kentucky) மற்றும் தென்கிழக்கு மாநிலமான வேர்ஜீனியா (Virginia) ஆகியவற்றில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர மிசிசிப்பி மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் பிராந்தியத்தின் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவ சுழலினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே இந்த காலநிலை மாற்றம் தோன்றியுள்ளதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam