பெரும் அச்சத்தில் இலங்கையில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள்
இலங்கையில் உள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் தங்களது அரசுகளின் கட்டளைக்கமையவே செயற்படும். அரசுகளின் விருப்பத்தினை மாத்திரம் நிறைவேற்றும் தூதரகங்கள் தங்களது நலனை பொருத்தே செயற்படும்.
இலங்கைத்தீவு வெளிநாடுகளின் கேந்திர மையமாக காணப்படும் நிலையில், சீனாவினை காரணம் காட்டி தங்களது செயற்பாட்டில் மாத்திரம் அவதானமாக செயற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இலங்கை அரசிடம் இருந்து எதனையும் பெற முடியாது என்ற நிலை ஏற்படும் போது மாத்திரம் தூதரகங்கள் தமிழ் மக்களின் உதவியை நாடி தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |