மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இரு இந்தியர்கள் கைது
இந்தியாவில் (India) இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் வருகை தந்து சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட சகோதர்கள் இருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நடவடிக்கை நேற்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று மாலை மட்டக்களப்பு ஏறாவூர் - தளவாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
சுற்றுலா விசா
இதன்போது, அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் தமிழ்நாடு - மதுரையைச் சேர்ந்த குறித்த இருவரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 38 வயதுடைய பெண் மற்றும் அவரின் சகோதரரான 51 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த ஜூன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam