மென்பந்தாட்ட இறுதி போட்டியில் அம்பன் பிங்பொங் வெற்றி!
உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் தனது 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாண ரீதியில் மாபெரும் விளையாட்டு தொடர்களை நடாத்திவருகின்றது.
இந்நிலையில் நேற்று (31.07.2024) மென்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அம்பன் பிங்பொங் அணியை எதிர்த்து அம்பன் சிவனொளி அணி மோதியது.
நாணய சுழற்சி
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அம்பன் சிவனொளி அணித்தலைவர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பன் பிங்பொங் அணி 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 9விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றது.
95 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அம்பன் சிவனொளி அணியினர் 10 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக 2024 ஆம் ஆண்டுக்கான மென்பந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரை அம்பன் பிங்பொங் அணியினர் தட்டிச் சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
