வைத்தியர் ஷாபி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
அனுராதபுரத்தில் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றினுள் இருந்து மர்மான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
கலவெவ, பலலுவெவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, மொஹமட் அஸ்கர் மொஹமட் நிதாம் என்ற 58 வயதுடையவரே, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் மீட்பு
ஒரு பிள்ளையின் தந்தையான இவர், அநுராதபுரம், தேவநம்பியதிஸ்ஸபுர பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பணி நிமித்தம் பலலுவெவ பகுதிக்கு வந்து வைத்தியருக்கு சொந்தமானது என கூறப்படும் குறித்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டின் படுக்கையில் சடலமாக கிடந்த நிலையில், இது இயற்கை மரணமா, தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை
இதேவேளை, உயிரிழந்த நபரின் சடலம் இருந்த படுக்கைக்கு அருகில் சில மருந்து வகைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெக்கிரவ பதில் நீதவான் குமார தென்னகோனினால் நேற்று இடம் பெற்ற விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் வீட்டின் பொறுப்பாளர் என கூறப்படும் ஒருவர் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam