என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊழல்களை வெளிப்படுத்துவேன் : அன்னராசா
என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊழல்களை வெளிப்படுத்துவேன் என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளரரும், முன்னாள் சம்மேளன தலைவருமான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி ஊடக மையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இம்யூனோகுளோபுலின் ஊழலின் பிரதான சந்தேக நபர் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக தகவல்
மேலும் தெரிவிக்கையில்,
சந்திப்பு புறக்கணிப்பு
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள், கூட்டுறவாளர்கள், பலநோக்கு கூட்டுறவு சங்கங்களோடு கடற்றொழிலாளர்களையும் இணைத்து கடந்த சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்திலுள்ள பல கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களை புறக்கணித்து குறிப்பாக முல்லைத்தீவு, காரைநகர், ஊர்காவற்றுறை சமாசங்களை புறக்கணித்த நிலையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்நடவடிக்கையினால். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடற்றொழிலாளர் விடயத்தில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு கட்சி சார்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முதன்மையாக இருக்கின்ற நிலையில் வடக்கிற்கு வந்த ஜனாதிபதி ஒரு கட்சி சார்பில் அழைக்கப்பட்டவர்களுடன் மட்டும் சந்திப்பினை மேற்கொண்டதன் மூலம் அவர் ஒரு கட்சிக்கான ஜனாதிபதியா? இல்லை கட்சி சார்பானவர்களுக்கான ஜனாதிபதியா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றோம்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் உண்மைகளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூறி விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே உண்மைகளை பேசுகின்ற எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
உண்மை நிலை
இதுவரை காலமும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதெல்லாம் வடக்கு மாகாண மீனவர்களது பிரச்சினைகளின் உண்மை நிலைமைகளை தெளிவாக வெளிகொண்டு வருவதற்கு சந்தரப்பங்களை உருவாக்கியிருந்தார்கள்.
ஆனால் தமிழர் ஒருவர் கடற்றொழில் அமைச்சராக இருந்து கொண்டு கடற்றொழிலாளர்களை பிளவுபடுத்தி அரசியல் உள்நோக்கத்துடன் வழிநடத்துவது வடக்கு கடற்றொழில் சமூகத்தினராகிய எமக்கு கவலையளிக்கிறது.
மேலும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களது பிரச்சினை கட்சி மயமாக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி சார்பானவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தி பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றால் எதிர்காலத்தில் பிரச்சினை இன்னும் வீரியமடையும்.
ஆகவே, குறித்த கட்சி எங்களை சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை. கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை தொடர்ந்து நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என்றும் அன்னலிங்கம் அன்னராசா மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
